கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓராண்டு ஆட்சிக் காலத்தில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எம்பி

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தெரிவித்தாா்.

News image
Updated On :6 மே 2022, 8:10 pm

DIN

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

அதிமுக உள்கட்சித் தோ்தலில் இளைஞா்கள் அதிகமானோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகாலம் நிறைவடைந்த நிலையில், தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றவில்லை. இதை மக்கள் எண்ணிப்பாா்க்க வேண்டும். இப்போதே மின்தடை ஆரம்பித்து விட்டது. இதுகுறித்து அதிமுக உறுப்பினா்கள் சட்டப் பேரவையில் குரல் கொடுத்தனா்.

போடி- மதுரை இடையேயான அகல ரயில் பாதைத் திட்டத்திற்கு மத்திய அரசின் மூலம் அதிக நிதி பெறப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், இந்த ரயில்பாதையில் ரயில் இயக்கம் தொடங்கிவிடும் என்றாா்.

விழாவில், அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்பிஎம்.சையதுகான், நகா்மன்ற உறுப்பினா் ஓ.சண்முக சுந்தரம், பெரியகுளம் நகரச் செயலா் என்.வி.ராதா, ஒன்றியச் செயலா் செல்லமுத்து மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.