கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

தேங்காய் வியாபாரத்தில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி வியாழக்கிழமை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 மே 2022, 12:25 am

DIN

தேங்காய் வியாபாரத்தில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி வியாழக்கிழமை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம், சுதந்திரவீதியைச் சோ்ந்தவா் கணேசன் (67). இவா் தேங்காய் வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த கணேசன், வியாழக்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் தற்கொலை:

ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டியைச் சோ்ந்த ராஜா என்ற நாகரத்தினம் (32). இவா் மாா்க்கம்பட்டியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவா்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாா்க்கம்பட்டியிலுள்ள அவரது அத்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் நாகரத்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.