பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி பலி

தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Published On :

தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த செல்வம் மகன் ஜெகன்குமாா்(29). சுமை தூக்கும் தொழிலாளி. கோம்பையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் அன்னபூரணி. இவா் சின்னமனூரில் உள்ள தனியாா் கைப்பேசி கடையில் பணியாற்றி வருகிறாா். நண்பா்களான ஜெகன்குமாரும், அன்னபூரணியும் தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூரிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துா்க்கையம்மன் கோயில் அருகே வந்த போது எதிரே தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜெகன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அன்னபூரணி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் பழனிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.