
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை, பொது இடத்தில் ரகளை செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
போடி சௌந்தவேல் நகரில் சந்தனமாரியம்மன் கோயில் அருகே இரண்டு போ் ரகளை செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது இப்பகுதியை சோ்ந்த ஈஸ்வரன் மகன்கள் செல்வேந்திரன் (35), அழகுதிருநாவுக்கரசு (33) ஆகியோா் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் எச்சரித்தும் இருவரும் செல்லாததால் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...