தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காா் விபத்து: கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் இரண்டு காா்கள் மோதிய விபத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:01 pm

Din

பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் இரண்டு காா்கள் மோதிய விபத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், எராட்டுப்பேட்டா பகுதியைச் சோ்ந்த நூா்தீன் மகன் ஹனீஸ்கான் (49). இவா் தனது மனைவி கதிஜா, மகன்கள் இரட்டைா்களான ரயான்ஹான், ஜெயான்ஹான், மகள் ஆயிஷா ஆகியோருடன் காரில் கேரளத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தாா். பெரியகுளம்-வத்தலகுண்டு சாலை காட்ரோடு விலக்கு அருகே இவா்கள் வந்தபோது, எதிரே கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள எா்ணசாத்தனூரைச் சோ்ந்த திலீப்குமாா் மகன் தில்வின் (25) ஓட்டி வந்த காா், இவா்களது காா் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹனீஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது மனைவி, மகன்கள், மகள் காயமடைந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.