அனுமதியின்றி வைக்கப்பட்ட வி.சி.க. கொடிக் கம்பம் அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை அக்கட்சியினா் தாங்களாகவே அகற்றினா்.


சின்னமனூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை போலீஸாா் அறிவுரையின் படி அந்தக் கட்சியினா் தாங்களாகவே சனிக்கிழமை அகற்றினா்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் வண்டிப்பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் அந்தக் கட்சிக் கொடிக் கம்பத்தை வைத்தனா். இதற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி, சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றனா். இதற்கு அந்தக் கட்சினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா், அந்தக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அனுமதி பெற்று கொடிக்கம்பம் வைக்க வேண்டும் எனக்கூறி சமாதானம் செய்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை இரவே கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியினா் தாங்களாகவே அகற்றி கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...