அனுமந்தன்பட்டி கோயில் முடமுழுக்கு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி ஸ்ரீ கோவிந்தசாமி கோயிலில் வியாழக்கிழமை முடமுழுக்கு விழா நடைபெற்றது.

அனுமந்தன்பட்டி ஸ்ரீ கோவிந்தசாமி கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.

அனுமந்தன்பட்டி - கோவிந்தன்பட்டி யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய், புதன்கிழமைகளில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்று, காலை 10 மணிக்கு ஆலய பிரதான கோபுரங்கள், பரிகார தெய்வங்களின் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள்.
இதில் அனுமந்தன்பட்டி ,கோவிந்தன்பட்டி , உத்தமபாளையம் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். காலை 11.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்களுக்கு தாலி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...