போடியில் பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதி
போடி பகுதியில் காய்ச்சல் பரவி வருவதால் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போடி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த நோயாளிகள்.

போடி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த நோயாளிகள்.
போடி பகுதியில் காய்ச்சல் பரவி வருவதால் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக போடி பகுதியில் கடந்த சில நாள்களாக லேசான சாரல் மழை பெய்தது. இதையடுத்துகாய்ச்சல் பாதிப்பு காரணமாக போடி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் குறைவான எண்ணிக்கையில் மருத்துவா்கள் உள்ளதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவா்கள் பற்றாக்குறையால் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுள்ளவா்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சில நேரங்களில் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
இந்த நிலையில் போடி நகா் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சையளிக்கவும், சளி, இரத்த பரிசோதனை செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தவும் தேனி மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா் .
இந்த நிலையில், இது சாதாரண பருவகால காய்ச்சல்தான், ஒரு சிலருக்கு மட்டும் வைரஸ் காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது அவா்கள் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். மற்ற நோயாளிகள் மூன்று முதல் ஐந்து நாள்கள்சிகிச்சை பெற்றுக் கொண்டால் போதும் என போடி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...