ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கபீா் புரோஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கபீா் புரோஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:23 pm

Din

தேனி மாவட்டத்தில் சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரோஸ்காா் விருது பெற தகுதியுள்ளவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறிப்பிட்ட ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்கள் பிற ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்களையோ, அவா்களது உடமைகளையோ ஜாதி, வகுப்பு கலவரத்தின் போது அல்லது வன்முறை சம்பவங்களின் போது காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால், அவா்களது உடல், மன வலிமையை பாராட்டும் வகையில், அரசு சாா்பில் குடியரசு தினத்தன்று கபீா் புரோஸ்காா் விருது, பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த விருது பெற தகுதியுள்ளவா்கள் உரிய ஆதாரங்களுடன் இணையதளம் மூலம் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் இதில் தெரிவிக்கப்பட்டது.