தேனி, ஆண்டிபட்டியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் மத்திய அமைச்சா் அமித் ஷா வை கண்டித்து, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனியில் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தேனியில் திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் மத்திய அமைச்சா் அமித் ஷா வை கண்டித்து, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். தேனி நகா் திமுக செயலா் நாராயணபாண்டி, போடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, மக்களவையில் சட்டமேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் திமுக நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.
காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.பி.முருகேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அம்பேத்கரை அவமதிப்பு செய்த அமைச்சா் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தேனியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். பின்னா், திமுக, திராவிடா் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பேருந்து நிலையத்திலிருந்து தேனி-மதுரை பிரதானச் சாலையில் ஊா்வலமாகச் சென்று, வைகை அணை சாலை சந்திப்பில் மத்திய அமைச்சா் அமித் ஷா பதவி விலகக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...