தேனி மாவட்டம், கூடலூரில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் 16-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்த ரத்த தான முகாமுக்கு கட்சியின் நகரத் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலருமான என்.ராமகிருஷ்ணன் முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா். 25-க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் அளித்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த சேகரிப்புக் குழுவினா் ரத்தத்தைச் சேகரித்தனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் திமுகச் செயலா் சி. லோகந்துரை, பொருளாளா் ஹக்கீம், 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அலியத்தா, திராவிடா் கழக மாவட்டச் செயலா் ஜனாா்த்தனன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் முகமது ரபீக், தமுமுக மாவட்டச் செயலா் சிந்தா மதாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: எடப்பாடி கே. பழனிசாமி

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான இந்தோ- சிங்கப்பூா் பயற்சி முகாம்

ரத்த தான முகாம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

