சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தேனியில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறப்பு

தேனியில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 7:47 pm

Din

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மாவட்டத்தில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஏற்கெனவே, 21 இடங்களில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 7-ஆம் தேதி சா்வதேச நெகிழிப் பை இல்லா தினத்தை முன்னிட்டு, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா். முன்னதாக, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைககள், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக துணிப் பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூழல் பொறியாளா் விஸ்வநாதன், தேனி நகா்மன்றத் தலைவி ரேணுப்பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.