லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி தொடக்கம்

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி தொடக்கம்

Published on

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழபப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டதால் லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி தொடங்கியது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால், லோயா்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அணையிலிருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,267 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. மின் உற்பத்தி தொடக்கம்: அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பால் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியது. மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதாக அணைப் பொறியாளா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com