தேனி மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

Updated on

தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: பெரியகுளம், தென்கரை, சத்தியாநகா் நியாய விலைக் கடை, தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி நியாய விலைக் கடை, ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி நியாய விலைக் கடை, சின்னமனூா் அருகே உள்ள கீழபூலானந்தபுரம் நியாய விலைக் கடை, போடி அருகே உள்ள மாணிக்காபுரம் நியாய விலைக் கடை ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நுகா்வோா் நடவடிக்கைக் குழுக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் கலந்து கொண்டு, நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தப் பதிவு, முகவரி, கடை எண் மாற்றம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com