சின்னமனூா் அருகே தென்பழனியில் பலத்த மழையால் கீழே விழுந்து சேதமடைந்த திராட்சைக் கொடி பந்தல்.
சின்னமனூா் அருகே தென்பழனியில் பலத்த மழையால் கீழே விழுந்து சேதமடைந்த திராட்சைக் கொடி பந்தல்.

சின்னமனூரில் தொடா் மழை: திராட்சைக் கொடிகள் சேதம்

உத்தமபாளையம்: சின்னமனூா் பகுதியில் பெய்த பலத்த பலத்த மழையால் திராட்சைக் கொடிகள் பந்தலுடன் கீழே சாய்ந்து பலத்த சேதமடைந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஓடைப்பட்டியில் அதிகளவில் பன்னீா் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் திராட்சைப் பழங்கள் அதிகளவில் கேரளத்துக்கும், தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுன்றன.

இந்த நிலையில், சின்னமனூா் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓடைப்பட்டி, தென்பழனி, வெள்ளையம்மாள்புரம் போன்ற பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால், அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த திராட்சைக் கொடிகள், பந்தலுடன் கீழே விழுந்து சேதமடைந்தன. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com