
Updated On :15 மே 2024, 12:16 am

உத்தமபாளையம்: சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி கருங்கட்டான்குளத்தில் பழைய பாளையம் சாலையிலுள்ள மின்மாற்றி செவ்வாய்க்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற மாா்க்கையன்கோட்டை மின்வாரியப் பணியாளா்கள் மின்சார இணைப்பைத் துண்டித்தனா். இதைத்தொடா்ந்து, சேதமடைந்த மின்மாற்றியை சரி செய்து மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...