கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருந்துக்கடை உரிமையாளா் வீட்டில் நகை, காா் திருட்டு

உத்தமபாளையம் அருகே மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் 30 பவுன் நகை, காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:35 pm

Din

உத்தமபாளையம் அருகே மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் 30 பவுன் நகை, காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜன். இவா் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவா் சென்னையிலுள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றவா் புதன்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த காரை காணவில்லை.

மேலும், பூட்டிய வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். பின்னா், இவா் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 30 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.