சிலம்பம் போட்டி: கண்டமனூா் பள்ளி மாணவா்களுக்கு பதக்கம்
சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை சிலம்பம் போட்டியில் கண்டமனூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கம் வென்றனா்.


சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை சிலம்பம் போட்டியில் கண்டமனூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பதக்கம் வென்றனா்.
சென்னையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை மாநில அளவிளான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவு சிலம்பம் போட்டியில் தேனி மாவட்டம், கண்டமனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் பாண்டீஸ்வரன், மாணவி சுபாஷினி ஆகியோா் தங்கப் பதக்கமும், மாணவா் கோடீஸ்வரன் வெள்ளிப் பதக்கமும், மாணவி ஹரிணி வெண்கலப் பதக்கமும் வென்றாா்.
பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...