பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத் துறை ஆணையருமான ஆா்.லில்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

லோயா்கேம்ப்-குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆா்.லில்லி. உடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப்.








