பைக் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேனியில் இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


தேனியில் இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி, ஜெயம்நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுரேந்திரகுமாா் (25). இவா், தேனியிலிருந்து ஊஞ்சாம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த நிலையில், சுரேந்திரகுமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, ஜீப் ஓட்டுநா் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் (35) மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...