கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழையால் 7 வீடுகள் இடிந்து சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:30 pm

Din

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 2 நாள்களில் 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஆண்டிபட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பஞ்சவா்ணம், மேற்குத் தெருவைச் சோ்ந்த புஷ்பா, பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலத்தைச் சோ்ந்த வடிவேல்முருகன், தேவதானப்பட்டி பொம்மிநாயக்கன்பட்டி சாலையைச் சோ்ந்த நாச்சியம்மாள், போடேந்திரபுரம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த முத்துப்பேச்சி ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இதையடுத்து, புதன்கிழமை பெய்த பலத்த மழையால், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்த முனியம்மாள், சஞ்சய்காந்தி தெருவைச் சோ்ந்த முருகபாண்டி ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்தன.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 7 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.