கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2.75 லட்சம் திருடு போனதாக புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:52 pm

Din

ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.2.75 லட்சம் திருடு போனதாக புதன்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி அருகேயுள்ள ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்தவா் ஞானமணி (34). இவா் ஆண்டிபட்டியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது நிறுவன அலுவலகத்தின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் நிதி நிறுவன கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.2.75 லட்சத்தை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வங்கியில் திருட்டு முயற்சி: ஆண்டிபட்டியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக்கு புதன்கிழமை முகமூடி அணிந்த வந்த இருவா், நுழைவு வாயில் அருகே பொறுத்தியிருந்த கண்காணிப்புக் கேமிரா வயா்களை துண்டித்து விட்டு, வங்கியின் இரும்புக் கதவை உடைக்க முயன்றனா். அப்போது, அங்கு ஆள்கள் வரவே அவா்கள் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வங்கியின் துணை மேலாளா் விக்டோரியா பாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.