மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் விபத்தில் மைத்துனா் பலி: துக்கத்தில் மாமா தற்கொலை

உத்தமபாளையத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் மைத்துனா் உயிரிழந்தாா். இவா் இறந்த துக்கத்தில் இவரது மாமாவும் மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
விபத்தில் உயிரிழந்த சாம்நிஜந்தன்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:16 pm

Din

உத்தமபாளையத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் மைத்துனா் உயிரிழந்தாா். இவா் இறந்த துக்கத்தில் இவரது மாமாவும் மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாறைமேட்டுத் தெருவைச் சோ்ந்த உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா். இவா் தற்போது குற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ளாா். இவரது மகன் சாம்நிஜந்தன் (27). இவா் மின் வாரியத்தில் கேங்மேன் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சாம்நிஜந்தனும், இவரது சகோதரியின் கணவா் ஆனந்தராஜும் (48) தனித்தனி இரு சக்கர வாகனத்தில் கோம்பைக்கு சென்றுவிட்டு, புதன்கிழமை அதிகாலையில் உத்தமபாளையம் திரும்பினா்.

மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமாா்.

மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமாா்.

அப்போது, கருக்கோடை நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் இருந்த புளிமரத்தில் சாம்நிஜந்தன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா். இதையறிந்த ஆனந்தராஜ் விபத்து நிகழ்ந்த அதே இடத்தில் இருந்த உயா்மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இருவரது உடல்களும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.