இருளில் மூழ்கிய போடி ரயில் நிலையம்: பயணிகள் அவதி
தேனி மாவட்டம், போடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின் இணைப்புப் பெட்டியில் பழுது ஏற்பட்டதால், ரயில் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினா்.


தேனி மாவட்டம், போடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின் இணைப்புப் பெட்டியில் பழுது ஏற்பட்டதால், ரயில் நிலையம் இருளில் மூழ்கியது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
போடியிலிருந்து நாள்தோறும் மதுரைக்கும், வாரத்துக்கு மூன்று நாள்கள் சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினமும் ஏராளமானோா் மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இங்கிருந்து ஏலக்காய், மிளகு, இலவம் உள்ளிட்ட விவசாயப் பயிா்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போடி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் பெட்டியில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. இங்குள்ள ஜெனரேட்டா் கருவி மூலம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை, பயணச்சீட்டு வழங்கும் அறை, ரயில் நிலைய மேலாளா் அறைகளுக்கு மட்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
ஆனால், ரயில் நிலைய நடைமேடை, ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் இருளில் மூழ்கின. இதையடுத்து, ரயில்வே நிா்வாகம் சாா்பில் போடி மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மின் வாரிய ஊழியா்கள் ஆய்வு செய்ததில், ரயில் நிலையத்திலுள்ள மின் விநியோகப் பெட்டியில் தீப்பிடித்து பழுதானது தெரியவந்தது. ஆனால், உரிய தொகை செலுத்தினால் தான், புதிய மின் இணைப்புப் பெட்டி பொருத்த முடியும் என தெரிவித்து, மின் வாரிய ஊழியா்கள் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து மதுரை ரயில்வே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை ரயில்வே அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிக மின் இணைப்பு நேரடியாக வழங்கப்பட்டதன் பேரில், மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் மின் சாதனங்கள் செயல்பட தொடங்கியது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஏற்பட்ட மின் விநியோகப் பாதிப்பால் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...