பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தேனி-போடி சாலையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


தேனி-போடி சாலையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பூதிப்புரம் பெரிய சாவடித் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சன்னாசிகுமாா் (17). இவா் தேனி-போடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, மாரியம்மன்கோவில்பட்டி விலக்கு அருகே இருளில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது, இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சன்னாசிகுமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், வடகாட்டுபட்டியைச் சோ்ந்த ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...