பிரதானக் குழாயில் உடைப்பு: தேனியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு
வைகை அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேனி நகராட்சி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தேனியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.


வைகை அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே தேனி நகராட்சி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தேனியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.
வைகை அணை அருகே உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டு, பிரதானக் குழாய்கள் மூலம் தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் மேல்நிலை, தரைமட்ட குடிநீா் தொட்டிகளில் குடிநீா் தேக்கப்பட்டு, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வைகை குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே தேனி குடிநீா் திட்ட பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 5 நாள்களாக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை பம்பிங் செய்யவில்லை. இதனால், தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டிராக்டா் டேங்கா் மூலம் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.
பிரதானக் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஓரிரு நாள்களில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, குடிநீா் விநியோகம் சீராகும் என்று நகராட்சி அலுவலா்கள் கூறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...