/

திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை: ஒருவா் கைது

திருமணமான பெண்ணுக்கு கைப்பேசியில் பாலியல் தொல்லை: ஒருவா் கைது

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 9:32 pm

Din

போடி அருகே பெண்ணுக்கு கைப்பேசியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு, இதே பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் கா்ணன் (19) கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தும் கா்ணன் பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதைக் கண்டித்த அந்தப் பெண்ணின் கணவரை கா்ணன், இவரது மூத்த சகோதரா் கிருஷ்ணன், தந்தை பாக்கியராஜ் ஆகியோா் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டினராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கா்ணன், கிருஷ்ணன், பாக்கியராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனா்.