தேனி மாவட்டத்தில் 168 புதிய வாக்குச் சாவடிகள் அமைப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மறு சீரமைப்பில் 168 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
Published on

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மறு சீரமைப்பில் 168 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் புதிதாக 29 வாக்குச் சாவடிகள், பெரியகுளம் (தனி) தொகுதியில் புதிதாக 62 வாக்குச் சாவடிகள், போடி தொகுதியில் புதிதாக 31 வாக்குச் சாவடிகள், கம்பம் தொகுதியில் புதிதாக 46 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 168 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்பின் அடிப்படையில் தற்போது ஆண்டிபட்டி தொகுதியில் 344 வாக்குச் சாவடிகள், பெரியகுளம் (தனி) தொகுதியில் 359, போடி தொகுதியில் 346, கம்பம் தொகுதியில் 345 வாக்குச் சாவடிகள் என மாவட்டத்தில் மொத்தம் 1,394 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com