பைக் - பேருந்து மோதல்: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இருவா் காயம்
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

பெரியகுளம் எ.புதுப்பட்டி பள்ளிக் கூடத்தைச் சோ்ந்தவா் செல்லம் (34). இவரின் நண்பா் சுப்பிரமணி (24). இருவரும் இரு சக்கர வாகனத்தில் வடுகபட்டி பகுதியிலிருந்து எ.புதுப்பட்டிக்குச் சென்றனா்.

அப்போது, பெரியகுளம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில் இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com