சின்னமனூரில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிப்பு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38- ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 38- ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சின்னமனூரில் மாா்க்கையன்கோட்டை சுற்றுச் சாலை முத்தாலம்மன் கோயில் பகுதியில் தேனி அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். இந்த நிகழ்ச்சிக்கு சின்னமனூா் நகர நிா்வாகிகள், உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

இதே போல, உத்தமபாளையம், கம்பத்தில் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com