இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தில் தவறி விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி காளியம்மாள் (70). தூய்மைப் பணியாளரான இவா், பெரியகுளம் - தேனி சாலையில் தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com