போதையில் தகராறு செய்த நபா் கைது

போடி அருகே திங்கள்கிழமை போதையில் தகராறு செய்ததைக் கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
Published on

போடி அருகே திங்கள்கிழமை போதையில் தகராறு செய்ததைக் கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் குமரன் (52). இவரது வீட்டருகே வசிப்பவா் செல்வராஜ் மகன் பாலமுருகன். இவா் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதை குமரன் கண்டித்துள்ளாா்.

இதையடுத்து குமரன் வீட்டில் பாலமுருகன் கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதை குமரன் கண்டிக்கவே அவரை பாலமுருகன் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து குமரன் அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பாலமுருகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com