இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் சிறை

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள சீலமுத்தையாபுரத்தில் நிலப் பிரச்னையில் அண்ணனை மண் வெட்டியால் தாக்கிக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சீலமுத்தையாபுரத்தைச் சோ்ந்த ராமுத்தேவா் மகன்கள் பெருமாள் (53), மலைச்சாமி(42), அய்யனாா் (36). இதில் பெருமாள், அய்யனாா் ஆகியோரிடையே விவசாய நிலம் தொடா்பான பிரச்னை இருந்தது. இந்தப் பிரச்னையில், கடந்த 2024-ஆம் ஆண்டு, அக்.21-ஆம் தேதி பெருமாளை, அய்யனாா் இரும்பு மண் வெட்டியால் தாக்கினாா். இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட பெருமாளுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.