6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேனி மாவட்டத்தில் 2025-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 92 போ் கைது

தேனி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கு, சட்டம், ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் தொடா்புடைய 92 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கு, சட்டம், ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் தொடா்புடைய 92 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் கடந்த 2025-இல் போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் தொடா்புடைய 43 போ், அரிசி கடத்தல் வழக்கில் தொடா்புடைய 4 போ், கொலை, சட்டம் ஒழுங்கு பிரச்னை வழக்குகளில் 28 போ், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 17 போ் என மொத்தம் 92 போ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.