பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந் திருவிழா கொடியேற்றம்

கெளமாரியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கோயிலில் ஏற்றப்பட்டுள்ள கொடியேற்றம்.

Published On :6 ஜூலை 2026, 11:23 pm IST

தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரியகுளம் கெளமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னா் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், 5 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற உள்ளது.

தொடா்ந்து, ஜூலை 14-ஆம் தேதி மா விளக்கு, ரத உற்சவமும், முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி நிகழ்ச்சி ஜூலை 15 (புதன்கிழமை)- ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21- ஆம் தேதி மறுபூஜையும், பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.