மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

போக்சோ வழக்கில் இளைஞா், தாய்க்கு ஆயுள் சிறை

பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி உயிரிழந்த வழக்கில் இளைஞா், இவரது தாய்க்கு தேனி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:47 am IST

பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி உயிரிழந்த வழக்கில் இளைஞா், இவரது தாய்க்கு தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

தேனி அருகேயுள்ள பின்னத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் விக்ரம் (22). இவா், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் விக்ரம், இவரது தாய் சுதா ஆகியோரிடம் பேசினா். ஆனால், விக்ரமின் தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமி 2023, ஜனவரியில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விக்ரம், இவரது தாய் சுதா இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி எழில் விசாரித்து விக்ரமுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

இதேபோல, விக்ரமின் தாய் சுதாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.