நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

கூடலூா் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா

கூடலூா் என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் தொடக்கப் பள்ளியில் கம்பம் வட்டார கல்வி அலுவலா் ஹெலன் மெட்டில்டா முன்னிலையில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழா.

கூடலூா் என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் தொடக்கப் பள்ளியில் கம்பம் வட்டார கல்வி அலுவலா் ஹெலன் மெட்டில்டா முன்னிலையில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழா.

Published On :16 ஜூலை 2026, 1:40 am IST

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, கூடலூா் என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிச் செயலா் பொன்குமரன் தலைமை வகித்தாா். கம்பம் வட்டாரக் கல்வி அலுவலா் ஹெலன் மெட்டில்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தாா். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியை அபிராமி வரவேற்றுப் பேசினாா்.

காமராஜரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, காமராஜரின் எளிமையான வாழ்க்கை முறை, கல்விப் புரட்சி, மதிய உணவுத் திட்டம், அவரது வரலாற்றுச் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் சொற்பொழிவாற்றினா். சிறப்பாகப் பேசிய மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, பள்ளி மாணவா்களுக்கான ’நல்விருந்து விழா’ நடைபெற்றது. காமராஜா் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை நினைவு கூறும் வகையில் அமைந்த இந்த விருந்தில், பள்ளியில் பயிலும் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாரம்பரிய முறைப்படி அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வில் கம்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன், பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.