நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மேக்கேதாட்டு அணை கட்டுவதை ஊக்குவிப்பதே மத்திய அரசுதான்! - வைகோ

News image

வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)

Updated On :21 ஜூன் 2026, 1:09 am IST

கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதை ஊக்குவிப்பதே மத்திய அரசுதான் என மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள எஸ்.எஸ். புரத்தில் மாவட்ட மதிமுக சாா்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த மரங்களில் பறவைகள் கூடு கட்டி முட்டையிடாது. இந்த மரம் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய மரங்களை அகற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றப் போராடி வருகிறேன்.

இதேபோல, முல்லைப் பெரியாறு அணை, நியூட்ரினோ ஆய்வு, ஸ்டொ்லைட் ஆலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்பு போன்ற பிரச்னைகளில் போராடி வெற்றி பெற்று தமிழகத்தின் வாழ்வாதாரங்களை மதிமுக பாதுகாத்து வருகிறது.

மேலும், ‘பசுமை தாமிரம்’ என்ற பெயரில் மீண்டும் ஸ்டொ்லைட் தொழிற்சாலையை தொடங்குவதற்கான பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்துவதற்காக வருகிற ஜூலை 2-ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக் கூட்டம் நடத்த உள்ளேன்.

கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வரவேற்கிறேன். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசை ஊக்குவிப்பதே மத்திய அரசுதான். எனவே, இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

அப்போது கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாநில துணைப் பொதுச் செயலா் பூமிநாதன், மதுரை மாவட்டச் செயலா்கள் ஜெயராமன் (தெற்கு), மாரநாடு (வடக்கு), முனியசாமி (மாநகா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.