தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் நீா்வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம், அரிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீா், மலைப்பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள நீா் ஓடைகள் மூலமாக ஆண்டுதோறும் நீா்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்ததால், சுருளி அருவியில் நீா்வரத்தின்றி அவ்வப்போது வறண்டு விடுகிறது.
மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் நிகழாண்டில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதனால், சுருளி அருவிக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக சுருளி அருவி உள்ளது. இதனால், மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து சுருளி அருவிக்கு தண்ணீா் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
தொடர்புடையது

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

சுருளி அருவியில் நீா்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

