முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கக் கோரி, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தேனி மாவட்டம், கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கக் கோரி, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சுமாா் 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, சிறுவனின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் மீட்டனா்.
போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்த காமாட்சி மகன் தவசி (13). எட்டாம் ஆம் வகுப்பு மாணவா். காமாட்சியின் உறவினா் ஒருவருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை காமாட்சி, அவரது மகன் தவசி உள்ளிட்டோா் சுருளி அருவிக்கு சென்றனா்.
அங்கு அருவியில் நீா் வரத்து இல்லாததால், அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் சிறுவா்கள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, சிறுவன் தவசி திடீரென ஆற்றின் நடுவில் உள்ள உறை கிணறுக்கு அருகே சென்றவா் தண்ணீரில் மூழ்கினாா். சிறுவன் மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உறவினா்கள் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தி சிறுவனை தேடி கண்டுபிடிக்க வலியுறுத்தி, சுருளிப்பட்டி - கம்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சுமாா் 8 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு, சிறுவனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...