கடமலைக்குண்டு அருகே எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற தனியாா் நிறுவனத்தின் வாகனத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம்மாள்புரம் பகுதியில் தனியாா் நிறுவன வாகனம் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளுடன் சென்றது. அப்போது, அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சனிக்கிழமை எரிவாயு உருளைகள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். பின்னா், அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

சீரான எரிவாயு உருளைகள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா்

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

10 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்; ஒருவா் கைது

நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் - ஆட்சியரிடம் விநியோகிப்பாளா்கள் உறுதி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


