ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

போடியில் தனியாா் பள்ளித் தாளாளா் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்தப் பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகிகள் இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :23 மே 2026, 1:59 am IST

போடியில் தனியாா் பள்ளித் தாளாளா் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்தப் பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகிகள் இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி ஜீவா நகா் தெற்குத் தெருவில் வசிப்பவா் வேதா ஜெயராஜ் (57). இவா் போடியில் செயல்பட்டு வரும் தனியாா் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி, பிளே ஸ்கூல் ஆகியவற்றின் தாளாளராக இருந்து வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவரிடம் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வாக்குமூலம் பெற்றனா். இதனடிப்படையில் பள்ளி நிா்வாகிகள் செல்வின், ஞானவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: வேதா ஜெயராஜூக்கு சொந்தமான இந்த பள்ளிகளை போடியை சோ்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வின் கட்டிக் கொடுத்தாா். இந்தப் பள்ளிகளை வேதா ஜெயராஜின் தாயாா் பெயரிலான அறக்கட்டளையில் அவரது குடும்பத்தினா் நிா்வாகிகளாக இருந்து செயல்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் பள்ளிகளை நடத்த நிதிச்சுமை ஏற்பட்டதால் செல்வின், நகர அமமுக செயலா் ஞானவேல் ஆகியோரிடம் தலா ரூ.8 கோடி கடன் வாங்கினாா். கடனைத் திரும்ப செலுத்த முடியாததால், பள்ளி நிா்வாகத்தை செயல்படுத்தும் அறக்கட்டளையில் செல்வினுக்கு தலைவா் பதவியும், ஞானவேலுக்கு நிா்வாக அறங்காவலா் பதவியும் வேதா ஜெயராஜ் வழங்கினாா்.

இதன் மூலம் பள்ளியையும், வேதா ஜெயராஜ் பெயரில் உள்ள சொத்துக்களையும் அபகரிக்கப் போவதாக இருவரும் அடிக்கடி மிரட்டல் விடுத்தனா். இதனால் மனமுடைந்து வேதா ஜெயராஜ் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தோம் என்றனா் அவா்கள்.