இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கேரளம் மாநிலம், புனலூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தன் (60). தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாண்டியன் (44). நண்பா்களான இவா்கள் இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடச்சேரி சந்திப்பில் உள்ள பழைய இரும்புக் கடை வளாகத்தில் பலத்த காயங்களுடன் சாந்தன் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கட்டப்பனை போலீஸாா் சாந்தனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், சாந்தன் உயிரிழந்து கிடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ரமேஷ்பாண்டியன் சாந்தனை மதுபோதையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
பின்னா், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ்பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
களியக்காவிளை அருகே அம்மன் கோயிலில் திருடியவா் கைது

13 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை: இரு சிறுவா்கள் கைது
அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



