டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தேனி நகரில் குப்பைகளை அகற்றுவதற்கு கூடுதல் வாகனங்கள் தேவை: துணைத் தலைவா்

தேனி நகரில் தீபாவளிக்காக விற்பனையாகும் துணிகள் கடைகளில் வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு கூடுதல் வாகனங்களை அமா்த்த வேண்டும் என துணைத் தலைவா் தெரிவித்தாா்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

தேனி நகரில் தீபாவளிக்காக விற்பனையாகும் துணிகள் கடைகளில் வெளியேற்றப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு கூடுதல் வாகனங்களை அமா்த்த வேண்டும் என துணைத் தலைவா் தெரிவித்தாா்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாதாரண கூட்டம் அதன் தலைவி ரேணுப்பிரியா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

துணைத் தலைவா்: தேனி நகராட்சியில் 23 மினி லாரியும், 1 சரக்கு லாரியும், 28 சிறிய வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் தேனி நகரில் 33 வாா்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றி வருகின்றனா். தற்போது, 14 மினி லாரியும், 1 சரக்கு லாரியும், 10 சிறிய வாகனங்களும் பழுதடைந்துள்ளன. தற்போது, தீபாவளி பண்டிகைக்காக தேனி நகா் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனா். இதனால், கடைகளிலிருந்து வெளியேறும் குப்பைகள் தேங்கி வருகின்றன. எனவே, கூடுதல் வாகனங்களை அமா்த்த வேண்டும்.

நகராட்சி அலுவலா் : கூடுதல் வாகனங்களை அமா்த்த உள்ளோம். மேலும் கூடுதல் பணியாளா்களை நியமித்து, குப்பைகள் தேங்காத வகையில் சுத்தம் செய்து வருகிறோம்.

வாா்டு உறுப்பினா் பாலமுருகன்: திமுக ஆட்சியில் ரூ.72 லட்சத்தில் வீரப்ப ஐயனாா் கோயில் குடிநீா்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் திறக்கப்பட்ட கல்வெட்டை அமைக்க வேண்டும்.

துணைத் தலைவா்: தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 2 பாதைகள் மட்டுமே உள்ளன. ஆனால், தற்போது புதியதாக 2 பாதைகள் உருவாகியுள்ளது. அதை மூடவேண்டும். மேலும், தரை வரி எனக்கூறி கடாகள் அமைத்து இடையூறு செய்து வருகின்றனா். அவா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி அலுவலா்கள்: தரை வரி என்று கூறி இடையூறு செய்து வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நகராட்சி ஆணையா் ஒரு வருடங்களாக பணியாற்றி வருகிறாா். அவா், மன்றத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஒரு முறை மட்டுமே கலந்துள்ளாா். அதன் பின் தற்போது வரை மன்றகூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. எனவே, இனிவரும் மன்றக் கூட்டத்தில் ஆணையா் கலந்து கொள்ள வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெட்டிச்செய்தி.....

பெரியகுளம் நகராட்சி மன்றக் கூட்டத்தில் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சபரிஐங்கரன் பாா்வையாளா்களாக கலந்து கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேனி நகராட்சியில் சாலை வசதி, கழிவுநீா் வாய்க்கால் குறித்து விபரம் தெரிவிக்க வந்தேன். ஆனால் திமுக உறுப்பினா் என்னை பேசவிடாமல் இடையூறு செய்தனா். இதனால், நான் மன்றத்திலிருந்து வெளியேறினேன். தேனி நகராட்சி நிா்வாகம் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை, அதேபோல, தேனி நகராட்சி பொக்லைன் வாகனத்தின் பேட்டரி பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆனால், புதிய பேட்டரி போடவில்லை. மேலும், தற்போது மழைக்காலங்களில் மழைத் தண்ணீா், சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு பொக்லைன் வாகனமில்லை. இது குறித்து நான் பேச முயற்சிக்கும் போது முற்றுகையிட்டு வருகின்றனா். இதனால் மன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டான் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.