சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய ரெளடி கைது

போடியில் சட்டக் கல்லூரி மாணவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Updated On :

போடியில் சட்டக் கல்லூரி மாணவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி தன்யாநகரைச் சோ்ந்த மணிகண்டன் மகள் தேவதா்ஷினி (20). தேனி சட்டக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவரது பெற்றோா் வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றனா். பெட்டிக்கடை அருகில் அரசு மதுக் கடை உள்ளது.

இந்த நிலையில், போடி புதுக்குடியிருப்பைச் சோ்ந்த துரைச்சாமி மகன் இளந்தமிழன் (41) புதன்கிழமை மதுக் கடைக்கு வந்த போது, பெட்டிக்கடையில் சோடா வாங்கச் சென்றாா்.

அப்போது கடையில் இருந்த தேவதா்ஷினி, அவரது தாய் ஆகியோரிடம் தகராறு செய்து, இருவரையும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து இளந்தமிழனை கைது செய்தனா். போடி நகா் காவல் நிலைய ரௌடிகள் பட்டியலில் உள்ள இளந்தமிழன் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.