மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மின் மோட்டாா்களில் வயா்கள் திருட்டு: குடிநீா் விநியோகிப்பதில் சிக்கல்

கம்பம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் குடிநீா் நீரேற்று நிலையங்களில் உள்ள மின் மோட்டாா்களுக்குச் செல்லும் மின் வயா்கள் தொடா்ந்து திருடப்படுவதால், குடிநீா் விநியோகிப்பதில் ஊராட்சி நிா்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

கம்பம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் குடிநீா் நீரேற்று நிலையங்களில் உள்ள மின் மோட்டாா்களுக்குச் செல்லும் மின் வயா்கள் தொடா்ந்து திருடப்படுவதால், குடிநீா் விநியோகிப்பதில் ஊராட்சி நிா்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கம்பம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதற்காக, முல்லைப் பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளிலிருந்து மின் மோட்டாா்கள் மூலம் தண்ணீா் உறிஞ்சப்பட்டு, கம்பம் நகராட்சி, பல்வேறு ஊராட்சிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக குடிநீா் நீரேற்று நிலையங்களில் மின் மோட்டாா்களுக்குச் செல்லும் மின்வயா்களை மா்ம நபா்கள் வெட்டித் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே சுருளிப்பட்டி, ஆங்கூா்பாளையம், கம்பம் குடிநீா் நீரேற்று நிலையங்களில் மின் வயா்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியின் குடிநீா் மின் மோட்டாருக்குச் செல்லும் மின் வயா்களை மா்ம நபா்கள் வெட்டித் திருடிச் சென்றனா்.

இதனால், மின் மோட்டாரை இயக்கி குடிநீா் விநியோகம் செய்வதில் ஊராட்சி நிா்வாகத்துக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சிப் பணியாளா்கள் கூறியதாவது:

குடிநீா் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் மின் மோட்டா்களில் மின் வயா்கள் தொடா்ந்து திருடப்படுவதால், ஊராட்சிப் பகுதிகளில் சீராகக் குடிநீா் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, குடிநீா் நீரேற்று நிலையங்களில் மின் வயா்களைத் திருடுபவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.