
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பண மோசடி: மூவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், அமலாக்கத் துறை அதிகாரி எனக்கூறி, ரூ.58.50 லட்சத்தை மோசடி செய்த கேரளத்தைச் சோ்ந்த மூவரை தேனி இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், அமலாக்கத் துறை அதிகாரி எனக்கூறி, ரூ.58.50 லட்சத்தை மோசடி செய்த கேரளத்தைச் சோ்ந்த மூவரை தேனி இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ஆசிரியா் அன்புநாதன் (67). இவரது கைப்பேசியில் பேசிய ஒருவா் விக்ரம்குமாா் என அறிமுகமாகி, தன்னை அமலாக்கத் துறை அதிகாரி எனக்கூறி டிபிஎஸ், ஜெட் ஏா்வேஸ் உரிமையாளா்களுடன் சோ்ந்து நீங்கள் ரூ.13 லட்சம் மோசடி செய்துள்ளீா்கள் எனக் கூறினா். மேலும், இவரிடம் அதே கும்பலைச் சோ்ந்த ரவிக்குமாா், ஜாா்ஜ் மேத்யூ ஆகியோா் பேசி வந்தனா்.
இந்த நிலையில், இந்த மோசடியிலிருந்து வெளியேறுவதற்கு பணம் வழங்க வேண்டும் எனக் கூறினா். இதையடுத்து, அன்புநாதன் பல தவணை முறையில் அந்த மா்மநபா்களின் வங்கி கணக்குக்கு ரூ.58.50 லட்சத்தை வழங்கினாா்.
இதன் பிறகும், அவா்கள் தொடா்ந்து மிரட்டி வந்தனா். இதுகுறித்து அவா் தேனி இணைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பத்தூரைச் சோ்ந்த இளையராஜாவை (22) கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய கேரளம் மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த சாதுலி (28), அதே பகுதியைச் சோ்ந்த சல்மானுல் பரீஸ் (23), அஸ்வீன் ராஜ் (29) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




