முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் என்.சி.சி. சார்பில் இலவச மருத்துவ முகாம்

தேசிய மாணவர் படையின் 5 தமிழ்நாடு சைகை அணி தத்தெடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2012, 1:07 pm

கோ.ஜெயக்குமார்

தேசிய மாணவர் படையின் 5 தமிழ்நாடு சைகை அணி தத்தெடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நூர்சாகிபுரம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு அணியின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் பிரபாகர்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ராஜூ, சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆர்.அலுசோடை ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி. அதிகாரி டி.பொன்னியின்செல்வன் வரவேற்றார்.

மருத்துவ முகாமை ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவர் ராதா வெங்கடாச்சலம் தனது குழுவினருடன் வந்திருந்து நடத்தினார். இதில் சுமார் 500 கிராம மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அதிகாரிகள் டி.பொன்னியன்செல்வன், தனபால், முத்துப்பெருமாள், ஜெயக்குட்டி, கணேசன், ராஜ்குமார், கருணாகரன், முத்துக்கிருஷ்ணந், வர்கீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

உறவின் முறை தலைவர் அ.வேலுச்சாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.