சைக்கிள் மீது லாரி மோதி இளைஞர் சாவு

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார்.
  ராஜபாளையம் கீழாவாரம்பையைச் சேர்ந்த முத்து மகன் பால்பாண்டி(17). தனியார் ஆலையில் வேலை செய்துவந்த இவர் செவ்வாய்க்கிழமை மாலை சைக்கிளில், சின்ன சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சுபாஷ்(17) என்பவருடன் மதுரை சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக  வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, காயமடைந்த இருவரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பால்பாண்டி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான அருளாச்சியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com