இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ரயில்களில் அதிகரிக்கும் காத்திருப்போர் பட்டியல்: ராஜபாளையம் பகுதி பயணிகள் அவதி

கொல்லம், செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் வழியாக சென்னை செல்லும்  விரைவு ரயில்களில் காத்திருப்போர்

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கொல்லம், செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் வழியாக சென்னை செல்லும்  விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சிலம்பு, பொதிகை, தாம்பரம் சிறப்பு ரயில்கள் ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகின்றன. தற்போது, கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால், அனைத்து விரைவு ரயில்களிலும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியிலிருந்து, குளிர்சாதன பெட்டி முன்பதிவு வரை காத்திருப்பு நிலையே உள்ளது.
 குறிப்பாக வாரம் இருமுறை இயக்கப்படும் தாம்பரம்-கொல்லம் ரயிலில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த ரயிலில் எப்போது முன்பதிவு செய்தாலும், பெரும்பாலும் காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்படுகின்றனர்.
 இதனால், முன்பதிவற்ற பொது பெட்டிகளில் பயணிகள் வாசல், கழிப்பறை அருகில் அமர்ந்து, சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்ய. பயணிகள் கூட்டம் கருதி ஒரு நாள் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சுவீதா, மறுபடியும் இயக்கப்படும் அறிவிப்பு ஏதுமில்லை. படுக்கை வசதியுள்ள தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
 எனவே, இரவு நேரத்தில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுள்ள ரயில், பரிசீலனையில் உள்ள தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதியா ரயில், கொல்லம் விரைவு ரயிலை  சென்னை-செங்கோட்டை-சென்னை யிடையே  தினமும் இயக்கினால், ஏராளமான  பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம். எனவே, இதுகுறித்து, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெல்லை, விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.